Short News

தாக்குதலுக்கு உள்ளாகப்போகும் இந்தியா: பதறவைத்த யூ.எஸ்!

தாக்குதலுக்கு உள்ளாகப்போகும் இந்தியா: பதறவைத்த யூ.எஸ்!

இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் டான் கோட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவரும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய திண்டுக்கல் செல்வி!

ரயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய திண்டுக்கல் செல்வி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒரு ரயிலிலிருந்து இறங்கி வரும் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெண், 40 கிலோ கஞ்சா மூட்டைகளை ஒரு ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் செல்வி என்பதும் தெரிய வந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

நேற்று பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே பரபரப்பாக நடந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தோனியிடம் அவரது மனைவி சாக்ஷி இன்னொரு சிக்ஸ் அடிக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அடுத்த ஓவரில் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கும் போது அவர் அதை சிக்ஸாக மாற்றி தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
சென்னை அணி முதியோர் இல்லமா?  பதிலடி!

சென்னை அணி முதியோர் இல்லமா? பதிலடி!

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த டி20லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றிபெற்றது. இதில் தோனி 7 சிக்ஸர்கள் அடித்து நேற்று வானவேடிக்கை காட்டினார். இதை வைத்து இணையத்தில் நிறைய மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் சென்னை அணியில் வயதான வீரர்கள் இருப்பதை வைத்து முதியோர் இல்லமா? என்று கேள்விக்கு மீம் போட்டு பெங்களூரு ரசிகர்களை கலாய்த்து இருக்கிறார்.