Short News

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை!

சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்துள்ளது. நவீன தொழிற்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பாபர் 7பி என்ற ஏவுகணை ஜிபிஎஸ் இல்லாத நிலையிலும் செயல்படும் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் பாபர் 7பி ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கனிஷ்க் கோல்டு மோசடி: ரூ.143 கோடி டெபாசிட் முடக்கம்!

கனிஷ்க் கோல்டு மோசடி: ரூ.143 கோடி டெபாசிட் முடக்கம்!

சென்னையில் இயங்கி வந்த பிரபல கனிஷ்க் நகைக்கடை பெரிய நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ-யிடம் எஸ்பிஐ வங்கி முதலில் புகார் அளித்தது, இதையடுத்து, கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் பணத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
மே 4ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்!

மே 4ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்!

காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற 4 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை தமிழக தேசிய கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். 
இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவுகிறது கூகுள்.!

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவுகிறது கூகுள்.!

இந்தியாவில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தேடல் இன்ஜினிலேயே உங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது. புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புகளுக்கான தேடலை வெளியிடப் போவதாக இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம், ஒரு புதிய தேடல் அனுபவமாக கூகுள் ஐ/ஓ 2017 இல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இந்திய பயனர்களுக்காக இந்த அம்சம் களமிறக்கப்பட்டுள்ளது.