Short News

ரணிலை அகற்ற சிறிசேனா குரூப் தீவிரம்!

ரணிலை அகற்ற சிறிசேனா குரூப் தீவிரம்!

உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் ரணிலின் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அகற்ற இலங்கை அதிபர் தரப்பு கடும் நெருக்கடிகள் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்!

’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்!

பிரபல சர்வதேச இதழான டைம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பேடியம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம்பிடித்துள்ளார். மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது டிஜிட்டல் பேமண்ட் மூலம் பொருட்களை வாங்க வழி செய்தது இவரது தொழிற்நுட்பம். தற்போது சீனாவின் பெரும் முதலாளியான அலிபாபா ஜாக்மா பேட்டியம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் .
ஸ்மார்ட் ஏசிக்கு: ஒரு ஸ்மார்ட் டிவைஸ் தேவைதானே!

ஸ்மார்ட் ஏசிக்கு: ஒரு ஸ்மார்ட் டிவைஸ் தேவைதானே!

ஸ்மார்டான உலகில் எல்லாமே ஸ்மார்டாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு குளிர்சாதன பெட்டிகள் பெரும்பாலும் ரிமோர்ட் சென்சிங் மூலம் தான் இயக்கப்படுகிறது. இதனிடையே செல்சிபில் எனப்படும் இந்த ஸ்மார்ட் வையர்லெஸ் டிவைஸ் மூலம் உங்களது ஏசியை ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அறையின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு இது டெம்பரேச்சரை ஏற்றவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.
டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

புனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.