Short News

ஏடன் வளைகுடாவில் உருவாகிய சாகர் புயல்!

ஏடன் வளைகுடாவில் உருவாகிய சாகர் புயல்!

ஏடன் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சாகர் புயலாக வலுவடைந்துள்ளது . இந்த புயலுக்கு சாகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் உருவாகியுள்ளதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலை பார்த்த நடிகர் விஜய் யோகி பாபுவை மிகவும் பாராட்டினாராம். யோகி பாபு விஜய் 62 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 
அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

நடிகர் கமல் அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன் என கமல் கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கொடுமைகளை தைரியமாக கூறப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார்.