Short News

பிரச்சனை செய்யும் அதிபர்: தென்-ஆப்பிரிக்காவில் குழப்பம்!

பிரச்சனை செய்யும் அதிபர்: தென்-ஆப்பிரிக்காவில் குழப்பம்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை பதவி விலக கோரி ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த கோரிக்கையை அதிபர் ஜேக்கப் ஜுமா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தென் ஆப்பிரிக்க அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

அமெரிக்கா(டாலர்)-ரூ.66.9177, ஐரோப்பா(யூரோ) -ரூ.81.3052., பிரிட்டன்(பவுண்டு)- ரூ.93.1005 ஆஸ்திரேலியா(டாலர்) -ரூ.50.525, சிங்கப்பூர்(டாலர்)-ரூ.50.3649, ஹாங்காங்(டாலர்)- ரூ.8.518, மலேசியா(ரிங்கட்)-ரூ.17.093பக்ரைன்(தினார்) 177.128, குவைத்(தினார்)-ரூ.221.9372, ஓமன்(ரியால்)-ரூ.173.8339,கத்தார்(ரியால்)-ரூ.18.3395 சவுதி(ரியால்)-ரூ.17.8031, தாய்லாந்து(பாத்)- ரூ.2.1196.,
ஸ்டைலை மாற்றிய சன் பிக்சர்ஸ்!

ஸ்டைலை மாற்றிய சன் பிக்சர்ஸ்!

ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது இரண்டு மெகா புராஜெக்டுகளுடன் களத்தில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் ஒன்று ரஜினியின் புதிய படம். அடுத்து விஜய் நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம். முன்பு சன் பிக்சர்ஸ் படங்கள் என்றாலே, இப்படித்தான் இருக்கும் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அந்த ஸ்டைலை சன் பிக்சர்ஸ் தற்போது மாற்றிக் கொண்டுள்ளது.
நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு தருகிறார்!

நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு தருகிறார்!

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்த பிறகு நேற்று மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சிறையில் நிர்மலாதேவியிடம் இன்று சந்தானம் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.