Short News

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வழிபாடு நடத்திய விக்கி!

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வழிபாடு நடத்திய விக்கி!

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல்வரான விக்னேஷ்வரன், திரு நெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கோவிலில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்வதற்காக அவர் வழிபட்டார்; கோவிலில் அமர்ந்து தியானமும் செய்தார். இங்கு வழிபாடு நடத்திய பின்னர் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றார் விக்னேஷ்வரன்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-25; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-26; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-27; திருப்பூர்-26; வேலூர்-27; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 13; பிறை: வளர்பிறை; திதி: ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி; நட்சத்திரம்: பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம்; யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை, பிறகு மரணயோகம்; சூலம்: தெற்கு; ராகுகாலம்: பகல் 01:30 முதல் 03:00 வரை; எமகண்டம்: காலை 06:00 முதல் 07:30 வரை; நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலும் வறண்ட வெப்பமே நிலவியது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் நன்றாகவே வெயில் வெளுக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:51, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 3:19, மறைவு: அதிகாலை 3:53.