Short News

வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

வாயின் துர்நாற்றத்திற்கு மிகவும் முக்கிய பங்கு நாக்கிற்கு உள்ளது. வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது. தூய்மையான நாக்கு நம் வாயின் சுகாதாரத்தில் முக்கிய அம்சமாகும். ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் வாயைப் புத்துணர்வூட்டும்.

போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி!

போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடரும் பலி எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

விறுவிறுப்பாக நடந்து வரும் டி-20 லீக் போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றது.இன்றைய முதல் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் 2வது இடத்தில் இருக்கும் சென்னையும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு நேடியாக முன்னேறும். இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.
மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

மகள் வயது நடிகையை மணந்தவர் நாளைய முதல்வர்!

தமிழில் இயற்கை படத்தில் நடித்த நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்து கொண்டார் குமராசாமி. தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த அதே ஆண்டு தான் ராதிகாவும் பிறந்துள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள்,மகள் வயது பெண்ணை 2வது திருமணம் செய்த குமாரசாமி நாளைய முதல்வர் என கலாய்த்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் கன்னடர்கள் பலரும் ராதிகாவை கூகுளில் தேடியுள்ளனர்.