Short News

வாட்டர்தெரபி மூலமா வெயிட் குறைக்க இந்த 6 விஷயமும் ரொம்ப முக்கியம்...

வாட்டர்தெரபி மூலமா வெயிட் குறைக்க இந்த 6 விஷயமும் ரொம்ப முக்கியம்...

தண்ணீர் குடித்தால், உடலில் நச்சுப்பொருள்கள் சேரும்; செரிமான கோளாறுகள் வரக்கூடும். கூடவே, உடலில் கொழுப்பு சேர்ந்து, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். தினமும் நிறைய தண்ணீர் அருந்துவது, நல்ல பசியை ஏற்படுத்துவதோடு, மெட்டோபாலிஸம் என்னும் உடலியக்கத்தை ஒழுங்கு படுத்தும்; தசைகள் வலுப்பெறும். தேவையற்ற உடல் எடையை குறைப்பதற்கு, தண்ணீர் அருந்துவது மிகவும் ஏற்ற எளிய வழியாகும்.

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

சின்னத்திரையின் மூலம் பிரபலமாக தற்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளவர் நடிகர் ஜீவா. இவர் நடிகர் ரஜினியின் ஆதரவாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் ரஜினி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர் என கூறியுள்ளார். 
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.
தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

ஃபாத்திமா இறந்த பிறகு, அவரது உடைமைகளை சோதித்து பார்த்த போது அவரது பையில் மட்டுமே ஐந்து மில்லியன் லெபனான் பணம் இருந்தது அறியப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 2.25 இலட்சம் ஆகும்.

ஃபாத்திமாவின் பையை துழாவிக் கொண்டிருக்கையில் அதிலிருந்து வங்கி புத்தகம் ஒன்று சிக்கியது. அப்போது தான் ஃபாத்திமாவின் பெயரில் வங்கியில் 170 கோடி லெபனான் பணம் இருந்தது அறியவந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 7.5 கோடிக்கும் மேலாகும்.