Short News

எப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா?...

எப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா?...

வெள்ளை நிற ஆடைகளை எப்போதும் தனியாக துவையுங்கள். இதர வண்ண உடைகளுடன் சேர்த்து துவைக்க கூடாது. உங்களுக்கு நேரம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெனக்கெட்டுங்கள். அதே போல் துணியின் வகை, படிந்துள்ள அழுக்கு, கறை, துவைக்கும் நீரின் வெப்ப நிலை, நீங்கள் பயன்படுத்த இருக்கும் சோப்பு மற்றும் வெளுப்பான் ஆகியவற்றின் மேலும் ஒரு தனி கவனம், ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் இருக்கவேண்டும்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் செய்யப்பட்டது. தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் நேற்று ருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி அபிஷேக்மொகந்தியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.