Short News

கருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா?...

கருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா?...

கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தினால் கண்களின் கீழே உள்ள தோல் கருப்பாக காணப்படுகிறது. இதை தவிர காயங்கள், கண்களை சரியாக கவனிக்காமை, சத்துக் குறைபாடு போன்றவைகளினால் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. வலி, அழற்சி, வீக்கம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள். எனவே கண்களைப் பாதுகாக்க நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

மீண்டும் வெடித்தது ஹவாய் எரிமலை!

மீண்டும் வெடித்தது ஹவாய் எரிமலை!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் உள்ள எரிமலை இன்று மீண்டும் வெடித்துள்ளது. இதில் கடந்த ஒரு வாரம் முன்பு முதல் முறையாக வெடித்த எரிமலையால் மீண்டும் லாவா குழம்புகளை அப்பகுதிகளில் கக்கிக் கொண்டு வருகிறது. இது மொத்தமாக வெடித்த காரணத்தால் அப்பகுதி மக்கள் அத்தீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதில், எரிமலை சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்க அமெரிக்க அரசு மீட்பு படையை விரைந்துள்ளது
முரட்டு குத்து இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

முரட்டு குத்து இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

கில்மா படம் எடுத்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம்.பெயரில் மகிழ்ச்சியை வைத்திருக்கும் இயக்குனர் எடுத்த மேட்டர் காமெடி படம் ஹிட்டானது. அதை சிங்கத்தின் உறவுக்கார தயாரிப்பாளர் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து அந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் மீண்டும் மேட்டர் காமெடி படத்தை எடுத்தனர். முதல் படத்தை போன்றே இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு- தர்மேந்திர பிரதான்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு- தர்மேந்திர பிரதான்!

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்ததால்தான் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும்" என்று கூறினார்.