Short News

ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

அந்தரங்க பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். இதில் 3 வகை பேன்கள் உண்டு. தலை பேன், உடல் பேன், அந்தரங்க பேன் என 3 வகைப்படும். 'ப்திருஸ் புபிஸ்' என்று அறிவியல் ரீதியாக இது அழைக்கப்படும். பொதுவாக அந்தரங்க பேன்கள் மனித ரத்தத்தை குடிப்பதோடு, தாக்கிய பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும்.

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்து கொண்டிருக்கிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 407 கன அடியிலிருந்து 315 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 35.27 அடி; நீர் இருப்பு 9.78 டி.எம்.சி. ஆகும். குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

பெங்களூருவில் நேற்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணியை நசுக்கித் தள்ளியது சென்னை அணி. பெங்களூரின் ஏபி டி வில்லியர்ஸ் வெளுத்த 8 சிக்ஸர்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாராம் சென்னை கேப்டன் மஹேந்திர சிங் தோனி. ஆனாலும், அசராமல் தோனி 7 சிக்ஸர்களையும், அவருக்குத் துணையாக அம்பதி ராயுடு 8 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சென்னையை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.