Short News

குழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா?... கொடுத்தால் என்ன  ஆகும்?

குழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா?... கொடுத்தால் என்ன ஆகும்?

நிறைய பெற்றோர்கள் அதிக அளவிலான நோய்எதிர்ப்பு மருந்துகளை தங்கள் குழந்தைகளுக்கு தருகின்றனர் .மேலும் அவர்கள் குழந்தைகளுக்கான நோய்களை எளிய வீட்டு வைத்தியத்தை செய்து பார்ப்பது இல்லை. குறிப்பாக உங்கள் குழந்தை சளி அல்லது சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, நீங்கள் உங்கள் குழந்தைக்கு பூண்டு உட்கொள்ளுவத்தினை அதிகரிக்க வேண்டிய நேரம் இது.

கொல்கத்தாவிற்கு வெற்றி இலக்கு 161 ரன்கள்!

கொல்கத்தாவிற்கு வெற்றி இலக்கு 161 ரன்கள்!

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 15வது டி20 லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயித்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி வீரர் டி ஆர்சி ஷார்ட் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். 
லண்டனில் விண்ணை பிளந்த 'கோ பேக் மோடி' போராட்டம்!

லண்டனில் விண்ணை பிளந்த 'கோ பேக் மோடி' போராட்டம்!

லண்டன் சென்றுள்ள மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் மோடியே திரும்பி செல்லுங்கள், 'கோ பேக் மோடி' என்ற விண்ணை பிளந்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காஷ்மீரில் சிறுமி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், காவிரி வாரியம் அமைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக லண்டனில் இந்தியர்கள் போராடி வருகின்றனர். இதனால் #GoBackModi மறுபடியும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
அடுத்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்காது?

அடுத்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்காது?

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த முடிந்த 21வது காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் குவித்தனர் இந்திய வீரர்கள். ஆனால் அடுத்த காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கிச் சுடுதல் இருக்காது என்று தெரியவந்துள்ளது. இதனால், இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது