Short News

எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது?

எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது?

குழந்தைகள் இந்த சமுதாயம், வாழ்க்கை மற்றும் உலகின் விதிகள் இவற்றை புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை. பொறுமையுடன் பக்குவமாக அவர்களை அணுக வேண்டும். அதற்கு சில தந்திரங்களை நீங்கள் கையாள வேண்டியிருக்கும். அதற்காகத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறயுள்ளோம். கவனத்தை திசை திருப்புதல், விதிகளை தளர்த்தாதீர்கள் போன்ற வழிகளை கையாள வேண்டும்.

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வழக்கம்போல அந்த அணியில் இருந்து ரிஷத் பண்ட் 44 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். விஜய சங்கர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஹர்ஷல் படேல், சந்தீப், அமித் மிஸ்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.