Short News

பசங்க கைவிட்டாலும், பொண்ணுங்க கைவிடல - மகராசன் பொழைச்சுக் கிட்டான்!

பசங்க கைவிட்டாலும், பொண்ணுங்க கைவிடல - மகராசன் பொழைச்சுக் கிட்டான்!

ஒருபுறம் ப்ரியாவையும் அவரது முக பாவனையையும் குறித்து இலட்சக்கணக்கான ஆண்கள் பேசி புகழ்ந்து கொண்டிருக்கும் போது. அட என்னடா.. நம்ம பயலும் ஒருத்தன் எதிர்ல நின்னு லுக்கு விட்டானே.. அவன ஒரு பொண்ணு கூடவா கண்டுக்கல என்று ட்விட்டர் பக்கமாக சென்று நோட்டம் விட்டால்... ரோஷன் எனும் அந்த எதிர் லுக்வுட்ட ஆணுக்கும் பிரபோசல்கள் குவிந்தவண்ணமாக தான் இருக்கிறது.

சில்லறை கடனில் 25% வளர்ச்சி!

சில்லறை கடனில் 25% வளர்ச்சி!

இந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
ப்ரோக்கொலியின் பலன்கள்!

ப்ரோக்கொலியின் பலன்கள்!

பச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சரும பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
காளி' படத்தின் ரிலீஸ் தேதி!

காளி' படத்தின் ரிலீஸ் தேதி!

கிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.