Short News

40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க!

40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க!

இன்றைக்கு இருக்கிற பெரும்பாலனவர்களின் முதன்மையான பிரச்சனையாக இருப்பது சர்க்கரை தான். இதுல சுகர் இருக்கா? என்று கேட்டு சாப்பிடும் அளவிற்கு பயந்து போய் கிடக்கிறார்கள். ஆனால் அவை ஏற்படுத்துகிற தாக்கம் கொஞ்சம் நஞ்சமா என்ன? ராஜ்மாவில் கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. இவை உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-35; கோயம்புத்தூர்-33, திண்டுக்கல்-37, ஈரோடு-39, மதுரை-34, சேலம்-42; சிவகாசி-37; தஞ்சாவூர்-40; தூத்துக்குடி-38; திருச்சி-38, திருநெல்வேலி-37; திருப்பூர்-39; வேலூர்-44; ஊட்டி-18; கொடைக்கானல்-20; ஏற்காடு-31; ஏலகிரி-39; வேடந்தாங்கல்-42.
சோமாலியாவை புரட்டிய புயல்: உதவி கேட்கும் ஐ.நா!

சோமாலியாவை புரட்டிய புயல்: உதவி கேட்கும் ஐ.நா!

சோமாலியாவை புரட்டி எடுத்து வரும் புயலுக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சோமாலியா திடீர் பேரிடர் காரணமாக பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் புயல் தாக்கி இருக்கும் சோமாலியாவுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மைதான பராமரிப்பாளர்களுக்கு ரொக்கம்: ஷாக் தந்த தோனி!

மைதான பராமரிப்பாளர்களுக்கு ரொக்கம்: ஷாக் தந்த தோனி!

தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து புனே நகருக்கு சென்னை அணியின் போட்டிகள் மாற்றப்பட்டன. சென்னை அணிக்கு ஏற்றவாறு ஆடகளத்தை தங்களது கடின உழைப்பால் மாற்றினர் மைதான பராமரிப்பாளர்கள். இந்நிலையில் மைதான பரிமப்பாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் சென்னை அணி கேப்டன் தோனி.