Short News

நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா?...

நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா?...

நீங்கள் ஆசைப்பட்ட படி உயர்நிலையில் உங்களுக்கு ஒரு பணி அமைந்திருக்கலாம். அதனால் இரவு பகல் பாராமல் உழைத்துத் தள்ளுவீர்கள். சரியாக சாப்பிடாமல் அல்லது முறையாக என்ன சாப்பிட வேண்டுமென்று தெரியாமல், எதையாவது கொஞ்சம் கொரித்துவிட்டு செல்வீர்கள். அது மிகவும் கெடுதலான விஷயம். பகலில் வேலை செய்பவர்களைவிட நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் தான் முறையாக சாப்பிட வேண்டும்.

சீறும் அலைகள்: கடலுக்குள் மக்கள் செல்லத் தடை!

சீறும் அலைகள்: கடலுக்குள் மக்கள் செல்லத் தடை!

கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் 2 நாட்களுக்கு கடலில் நெருங்கிய இடைவெளியில் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் எழும்புமாம். இதனால் மீனவர்களும் பொதுமக்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: மீண்டும் திறக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்!

மதுரை: மீண்டும் திறக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்!

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்தில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமடைந்து, பின்னர் பூட்டி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அது பக்தர்கள் பார்வையிடுவதற்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா கடந்த ஒருசில நாட்களாகக் களைகட்டி வரும் நிலையில், இந்தத் தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் கைது?

எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் கைது?

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இவ்விவகாரத்தில் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள எஸ்.வி. சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.