Short News

ஆண்களை குண்டாகும் வினோத போட்டி!

ஆண்களை குண்டாகும் வினோத போட்டி!

எத்தியோப்பியாவில் போடி என்ற பழங்குயின மக்கள் ஆண்கள் குண்டாக இருக்க வேண்டும் என நம்பிக்கை வைத்துள்ளனர். குண்டாவதற்கு ஆண்கள் ரத்தத்தையும் பாலையும் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆண்கள் ஆறே மாதத்தில் குண்டாகி காட்ட வேண்டும். அப்படி செய்தால் அவர் தான் அந்த கூட்டத்தின் ஹீரோவாக தேர்தெடுக்கப்படுவார். இதனால் அந்த இன ஆண்கள் குண்டாக வேண்டும் என்பதை ஓர் லட்சியமாகவே வைத்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

திருப்பதி தேவஸ்தானத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக புகார் செய்யப்பட்டது. தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் நேற்று ருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி அபிஷேக்மொகந்தியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.