Short News

கண்ணிமைக்கு மேல வெள்ளை வெள்ளையா இருக்கா?...

கண்ணிமைக்கு மேல வெள்ளை வெள்ளையா இருக்கா?...

பிபிபரிடிஸ் காரணமாக சில வகை தொற்று மற்றும் பூஞ்சை தொற்றுகள் கண்ணிமைகளில் ஏற்படுகின்றன. இதனால் கண் புருவம் மற்றும் கண்ணிமை முடிகள் வறண்டு போய் பொடுகுடன் காணப்படும். இதனால் கண்ணிமைகளில் அரிப்பு, எரிச்சல் மற்றும் உருத்தல் போன்றவை ஏற்படுமாம். இதனை பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் மசாஜ், கற்றாழை ஜெல் போன்றவை பயன்படுத்தி குணப்படுத்தலாம்.
ஷுட்டிங்கில் காயமா? இல்லையா?- தனுஷ் பதில்!

ஷுட்டிங்கில் காயமா? இல்லையா?- தனுஷ் பதில்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், தற்போது ‘மாரி 2' படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த படப்பிடிப்பில் தனுஷ் அடிபட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு விளக்கமளித்த தனுஷ், "நான் நலமாக இருக்கிறேன், படப்பிடிப்பில் எனக்கு லேசான காயம் தான்" என்று ட்வீட் செய்துள்ளார்
கருணாநிதியே  இனி மீண்டு வந்தாலும் ...? செல்லூர் ராஜூ சவால்!!

கருணாநிதியே இனி மீண்டு வந்தாலும் ...? செல்லூர் ராஜூ சவால்!!

மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்கள் தற்போது வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள். ஸ்டாலினால் திமுகவில் திமுகவிற்கு தலைவராகக் கூட முடியாது, கருணாநிதியே இனிமேல் மீண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
ஞாபகமறதி இருப்பவர்களுக்கு தனி கிராமம்!

ஞாபகமறதி இருப்பவர்களுக்கு தனி கிராமம்!

பிரான்சில் நாட்டில் 'அல்சைமர்' எனப்படும் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பிரத்யேக கிராமத்தை அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த கிராமத்தில் வசிக்க 120 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் முடிவுக்குள் இந்த கிராமம் கட்டி முடிக்கப்படும் என தெரிகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more