Short News

முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா?... இத தடவுங்க சரியாகிடும்...

முதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா?... இத தடவுங்க சரியாகிடும்...

உங்கள் முகத்தில் தோன்றும் பருக்களைப் போன்றே தோள்பட்டையிலும் இறந்த தோல் செல்கள், அதிக எண்ணெய்ச் சுரப்பு பிற அசுத்தங்கள் உங்கள் தோலினை ஊடுருவிச் செல்லும்போது ஏற்படுகிறது. பாக்டீரியாக்கள் உங்கள் தோலின் துளைகளில் சிக்கினாலும் பருக்கள் ஏற்படலாம். தோள்பட்டைப் பருக்கள் வலியை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. தோலின் துளைகள் பெரியதாக இருப்பதால் தோன்றும் பருக்களும் பெரியதாக இருக்கும்.

எனது தந்தை எனக்கு அன்பை கற்பித்தார்: ராகுல் உருக்கம்!

எனது தந்தை எனக்கு அன்பை கற்பித்தார்: ராகுல் உருக்கம்!

அன்பையும், மதிப்பையும் மட்டுமே எனது தந்தை எனக்கு கற்பித்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 27வது நினைவுகள் நாள் இன்று. இதனை முன்னிட்டு டெல்லியில் இருக்கும் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிபா வைரஸ்: நெல்லை மருத்துவமனைகளில் ஆய்வு!

நிபா வைரஸ்: நெல்லை மருத்துவமனைகளில் ஆய்வு!

கேரளா மாநிலம் கோழிகோட்டில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இதில் நெல்லையில் சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபம் நபர்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்படும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
நிபா வைரஸ்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

நிபா வைரஸ்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நிபா வைரஸால் கேரளா மட்டுமின்றி தமிழகமும் பீதியடைந்துள்ளது.