Short News

காயங்கள் மிக விரைவில் குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

காயங்கள் மிக விரைவில் குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

உடலில் ஏற்படும் காயங்கள் மிக விரைவில் குணமாக்கும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்து வேறு எதுவும் இல்லை நம்மளுடைய உமிழ்நீர் தான். நமது உமிழ்நீர் தான் வருங்காலத்தில் நமது காயங்களை குணப்படுத்தப்போகிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே இதை சங்கப்பாடல்களில் எழுதிவைத்துள்ளனர்
கங்காருவை கொடுமைபடுத்தி கொன்ற சுற்றுலா பயணிகள்!

கங்காருவை கொடுமைபடுத்தி கொன்ற சுற்றுலா பயணிகள்!

சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் இருக்கும் வன உயிரியல் பூங்காவில் காண வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர், அமைதியாக உறங்கி கொண்டுருந்த கங்காருவை பார்த்து ஆத்திரமடைந்தனர். கங்காருவை எழுப்ப கல்லால் அடித்துள்ளனர். இதனால் காயமடைந்த கங்காரு உயிரிழந்தது. இத்தகைய செயலை பார்க்கும்போது இதில் யார் மிருகம் என்ற சந்தகம் அனைவருக்கும் எழுகிறது.
210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

ஸ்பெயினில் 210 மீட்டர் உயர ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து சாகச வீரர் கண்போரை கதிகலங்க வைத்தார். கார்லோஸ் பிரிஸ்ஸினோ என்ற அந்த வீரர் பூமியை நோக்கி குதித்த 5 வினாடிகளில் தனது பாராசூட்டை விரிந்து பத்திரமாக தரையிறங்கினார். இந்த காட்சியை ஏராளமானோர் தங்களது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்தனர்.
விவோ வி9 யூத் அறிமுகம்!

விவோ வி9 யூத் அறிமுகம்!

வி9 யூத் எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது விவோ நிறுவனம். கடந்த மாதம் வெளியான விவோ வி9 போலவே இந்தப் புதிய ஸ்மார்ட்போனும் உள்ளது. 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. 2 வண்ணங்களில் கிடைக்கும் இந்த வி9 யூத்தின் விலை ரூ.18,990 ஆகும்.