Short News

இது குடிமகான்களுக்கான ஜூஸ்!

இது குடிமகான்களுக்கான ஜூஸ்!

வெள்ளரிக்காய் மற்றும் கேரட் இந்த இரண்டையும் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நீரில் ஊற வைத்து கிடைக்கும் ஜூஸை பருகினால் கிடைக்கும் பலன்கள் பல. அதிலும், குடிமகான்களுக்கு இருக்கும் வாய் துர் நாற்றம், குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. இந்த ஜூஸில் உள்ள அதிகப்படியான ஆண்டி- ஆக்ஸிடெண்டுகள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றுகிறது
திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு!

திருநங்கை என்பதால் ஆசிரியர் பணி மறுப்பு!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த சுசித்திரா கடந்தாண்டு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார். திருநங்கை சுசித்திராவிற்கு அவரது பாலியல் அடையாளத்தால் தொடர்ந்து ஆசிரியர் பணி மறுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். தனக்கு ஆசிரியர் பணி வழங்கிட மேற்கு வங்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என திருநங்கை சுசித்திரா தே கோரிக்கை விடுத்துள்ளார்.
சில்மிஷம் செய்த போலீஸை வெளுத்து வாங்கிய பெண்!

சில்மிஷம் செய்த போலீஸை வெளுத்து வாங்கிய பெண்!

டெல்லியில் மங்கோல்பூரி என்ற இடத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் பொதுமக்கள் மத்தியில் அந்த போலீஸை வெளுத்து வாங்கியுள்ளார். சம்பத்தின் போது போலீஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ரஜினி படத்தில் இணைந்த பிரபல சண்டை பயிற்சியாளர்!

ரஜினி படத்தில் இணைந்த பிரபல சண்டை பயிற்சியாளர்!

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more