Short News

தூக்கமின்மையை விரட்டும் வாழைப்பழம்!

தூக்கமின்மையை விரட்டும் வாழைப்பழம்!

வாழைப்பழத்தை இரவில் சாப்பிடுவதன் மூலம் தூக்கமின்மையை விரட்டலாம். இரவில் படுக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கை, கால்களில் உள்ள தசைப் பிடிப்பு குணமாகும்.வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அது செரிமான மண்டலத்திற்கு நல்லது. இதனால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுடன் பேசி, நடனம் ஆடும் புதிய ரோபோ!

குழந்தைகளுடன் பேசி, நடனம் ஆடும் புதிய ரோபோ!

தனியாக இருக்கும் குழந்தைகளுடன் பேசி, நடனாடும் புதிய வகை ரோபோ சீனாவில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு ரோபோ கல்வி கற்றுக் கொடுப்பதுடன், அவர்களுடன் விளையாடியும் வருகிறது. மேலும், ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைக்கப்பட்டு குழந்தைகளின் செயல்பாடுகளையும் நேரடியாக பார்த்துக்கொள்ளலாம்.
உலகின் வயதான பெண் ஒராங்குட்டான் மரணம்!

உலகின் வயதான பெண் ஒராங்குட்டான் மரணம்!

உலகிலேயே மிகவும் அதிக வயதான ஒராங்குட்டான் எனப்படும் ஒரு வகை குரங்கு, தன் 62ஆவது வயதில் மரணமடைந்துள்ளது. கடந்த 1956ஆம் ஆண்டு பிறந்த புவான் என்ற அந்தப் பெண் ஒராங்குட்டான், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்தது. முதிர்ச்சி காரணமாக சமீபத்தில் அது மரணமடைந்தது. புவான் ஈன்றெடுத்த 11 ஒராங்குட்டான்கள் உலகின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சிக்கு பாஜக அழைப்பு!

ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சிக்கு பாஜக அழைப்பு!

ஜம்மு காஷ்மீரில் பாஜக - பிடிபி இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக கூட்டணி முறிந்தது. இதனால், அம்மாநில முதல்வர் மெகபூபா தலைமையிலான ஆட்சி கவிழந்தது. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மெகபூபா தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more