Short News

உடல் பருமனை குறைக்கும் நிலக்கடலை!

உடல் பருமனை குறைக்கும் நிலக்கடலை!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலை சாப்பிடுவது அதிகமான இரத்தப் போக்கை தடுக்கும். இதில், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்து அடங்கி உள்ளது. இதனால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடல் பருமனை குறைக்க முயற்சி செய்பவர்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக இதை சாப்பிட்டால் அதிகளவு சாப்பாடு உட்கொள்ள முடியாமல் உடல் எடை வேகமாக குறையும். 
கலைஞர் நினைவகத்தில் தேமுதிக தலைவர் அஞ்சலி!

கலைஞர் நினைவகத்தில் தேமுதிக தலைவர் அஞ்சலி!

சென்னை மெரினாவில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவகத்தில் தேமுதி தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதிஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கருணாநிதி மறைந்த நேரத்தில் விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா டி.ஆர்.எஸ். எம்.பி.களின் ஒரு மாத ஊதியம் கேரளாவுக்கு!

தெலுங்கானா டி.ஆர்.எஸ். எம்.பி.களின் ஒரு மாத ஊதியம் கேரளாவுக்கு!

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே தெலுங்கானா தரப்பில் முன்னதாக கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு தளத்தில் இருந்து கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.
பங்குச் சந்தைகள் உயர்வுடனேயே தொடக்கம்!

பங்குச் சந்தைகள் உயர்வுடனேயே தொடக்கம்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் நல்ல உயர்வுடனேயே தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 107.65 புள்ளிகள் உயர்ந்து 38,055.53 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 31.25 புள்ளிகள் அதிகரித்து 11,502 .00 புள்ளிகளாக இருந்தது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more