Short News

தொடங்கியது ரம்ஜான் நோன்பு!

தொடங்கியது ரம்ஜான் நோன்பு!

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குகிறது தமிழகத்தின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இதையடுத்து முஸ்லிம் பள்ளிவாசல்களில் சிறப்பு தராவி தொழுகை நடத்தப்பட்டது. நோன்பின்போது முஸ்லிம்கள் தினமும் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை எச்சில் கூட விழுங்காமல் நோன்பு இருப்பார்கள். வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

டாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

பாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை!

விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

வெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை!

டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வாங்ஹே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் திரில் வெற்றி பெற்றது.