Short News

உயிரை வாங்கும் சிலைகள்!

உயிரை வாங்கும் சிலைகள்!

சீனாவில் உள்ளது டோம்ப் கின் ஷி ஹுவாங் என்ற இடம். இந்த இடத்தில் டெரகோட்டாவில் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்வீரர்கள் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள சிலைகளில் இருந்து  அதிகப்படியான மெர்குரி வெளிவருகிறது. அதனை சிறிது நேரம் சுவாசித்தால் யாராக இருந்தாலும் மரணம் நிச்சயம். அதனால் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மகன் படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி!

மகன் படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி!

நடிகர் அரவிந்த்சாமிக்கு முதல் மனைவி மூலம் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 18 வயதான ருத்ரா ஐபி டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இதை அரவிந்த்சாமி ட்விட்டரில் பெருமையாக தெரிவித்துள்ளார். ஐபி டிப்ளமோ முடித்த மகனை மட்டும் அல்ல அவருடன் படித்த அனைவரையும் வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் அரவிந்த்சாமி.
மீண்டும் வெடித்தது ஹவாய் எரிமலை!

மீண்டும் வெடித்தது ஹவாய் எரிமலை!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் உள்ள எரிமலை இன்று மீண்டும் வெடித்துள்ளது. இதில் கடந்த ஒரு வாரம் முன்பு முதல் முறையாக வெடித்த எரிமலையால் மீண்டும் லாவா குழம்புகளை அப்பகுதிகளில் கக்கிக் கொண்டு வருகிறது. இது மொத்தமாக வெடித்த காரணத்தால் அப்பகுதி மக்கள் அத்தீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதில், எரிமலை சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்க அமெரிக்க அரசு மீட்பு படையை விரைந்துள்ளது
முரட்டு குத்து இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

முரட்டு குத்து இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

கில்மா படம் எடுத்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம்.பெயரில் மகிழ்ச்சியை வைத்திருக்கும் இயக்குனர் எடுத்த மேட்டர் காமெடி படம் ஹிட்டானது. அதை சிங்கத்தின் உறவுக்கார தயாரிப்பாளர் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து அந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் மீண்டும் மேட்டர் காமெடி படத்தை எடுத்தனர். முதல் படத்தை போன்றே இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது.