Short News

பதற்றப்படுவது ஒரு நோய்!

பதற்றப்படுவது ஒரு நோய்!

பதற்றமான மனநிலை என்பது அமைதியற்ற மனநிலை. இந்த நிலையில் மனித வாழ்க்கையில் சந்தோஷங்களையும், சுற்று நடக்கும் சம்பவங்களையும் மனம் உள்வாங்காது. எல்லாம் மாறக்கூடியது, எதுவும் 100 சதவீதம் அக்மார்க் இல்லை என்ற சின்ன புரிதல் நல்ல மாற்றத்தை உங்களுக்குள் உண்டாக்கும் காண முடியும்.
நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாகக் கைதாகியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர்களைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை.எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

ஆந்திராவை தமிழகம் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர் மாநில உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லை எனக் கூறினார்.