Short News

'இதுக்கு நிர்வாணமா திரியலாமே, விப***ரி' இப்படி அவன் திட்ட நான் செய்த குற்றம் இதுதான்!

'இதுக்கு நிர்வாணமா திரியலாமே, விப***ரி' இப்படி அவன் திட்ட நான் செய்த குற்றம் இதுதான்!

இதே ஏப்ரல் மாதம் தான்... அந்த சம்பவம் நடந்து ஓராண்டு காலம் இருக்கும். அந்த நாள் மட்டும் என் நினைவில் இல்லை. அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. காரணம், நான் தலைப்பில் குறிப்பிட்டு இருப்பது தான். "இதுக்கு நீ நிர்வாணமா திரியலாமே...", "தே***" இப்படியான வார்த்தைகள் கூறி ஒரு ஆட்டோ காரர் எங்களை (என்னையும், தோழியையும்) திட்டி சென்றார்.

சரி! இதற்கான கதை மற்றும் காரணம் என்ன?

முகேஷ் அம்பானிக்கு எதுக்கு Z பிரிவு செக்யூரிட்டி!

முகேஷ் அம்பானிக்கு எதுக்கு Z பிரிவு செக்யூரிட்டி!

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்னஸ் மேக்னட் முகேஷ் அம்பானிக்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த Z பிரிவு பாதுகாப்பு முக்கிய அரசியல்வாதிகள், உயர் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதை எதிர்த்து டெல்லி முதல்வர் கெஜிரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னவொரு காதல்: 19 வயது இளைஞரை மணந்த பாட்டி!

என்னவொரு காதல்: 19 வயது இளைஞரை மணந்த பாட்டி!

அமெரிக்காவின் டென்னிசி பகுதியைச் சேர்ந்த அல்மேடா என்ற 72 வயது மூதாட்டி, சமீபத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞருடன் நட்புடன் சகஜமாக பழகினார். பின்னர் நாளடைவில் அவர்களின் நட்பு காதலானது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், இருவீட்டாரையும் சமாதானம் செய்து அவர்கள் திருமணம்செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்!

’டைம்’ இதழின் 100 மனிதர்களில் பேடியம் நிறுவனர்!

பிரபல சர்வதேச இதழான டைம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பேடியம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம்பிடித்துள்ளார். மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது டிஜிட்டல் பேமண்ட் மூலம் பொருட்களை வாங்க வழி செய்தது இவரது தொழிற்நுட்பம். தற்போது சீனாவின் பெரும் முதலாளியான அலிபாபா ஜாக்மா பேட்டியம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் .