Short News

இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலை மிதமான வெப்பநிலை நிலவியது. காலை 8 மணிக்கு 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இன்றைய சூரிய உதயம்: காலை 05:56, மறைவு: மாலை 06:22; சந்திர உதயம்: காலை 06:09, மறைவு: மாலை 06:45.
இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

ஆந்திராவை தமிழகம் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர் மாநில உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லை எனக் கூறினார்.
டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

ராஜஸ்தான், சென்னை அணிக்கு எதிரான போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நொய்டாவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 21 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் உள்ள லயோலா மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரியும் டினா ஜோன்ஸ், அதே மருத்துவமனையைச் சேர்ந்த திருமணமான டாக்டரைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த டாக்டரின் மனைவியைக் கொல்ல கூலிப்படை ஒன்றை ஆன்லைன் மூலம் நாடியுள்ளார் டினா. இத்தகவலை அறிந்த போலீசார், டினாவைக் கைது செய்தனர். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் டினா.