Short News

காஷ்மீர் சிறுமிக்காக வரு ஆவேசம்!

காஷ்மீர் சிறுமிக்காக வரு ஆவேசம்!

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என நடிகை வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த ட்வீட்டுக்கு ஏராளமான நெட்டிசன்கள் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்து கொண்டிருக்கிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 407 கன அடியிலிருந்து 315 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 35.27 அடி; நீர் இருப்பு 9.78 டி.எம்.சி. ஆகும். குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

பெங்களூருவில் நேற்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணியை நசுக்கித் தள்ளியது சென்னை அணி. பெங்களூரின் ஏபி டி வில்லியர்ஸ் வெளுத்த 8 சிக்ஸர்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாராம் சென்னை கேப்டன் மஹேந்திர சிங் தோனி. ஆனாலும், அசராமல் தோனி 7 சிக்ஸர்களையும், அவருக்குத் துணையாக அம்பதி ராயுடு 8 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சென்னையை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.