Short News

இந்த 4'ல நீங்க எந்த வகை? உங்களைப்பத்தி தெரிஞ்சுக்க இதப்படிங்க!

இந்த 4'ல நீங்க எந்த வகை? உங்களைப்பத்தி தெரிஞ்சுக்க இதப்படிங்க!

உங்கள் உள்ளங்கை ரேகையில் உங்கள் ஒட்டுமொத்த வருங்காலம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்த அத்தனையும் அடங்கியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? கைரேகை ஜோதிடத்தின் மூலம் இதை அறிந்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.

உள்ளங்கையில் இருக்கும் இதய ரேகையின் அமைப்பை பொருத்தும், அதன் நீட்சி எவ்வாறு உள்ளது என்பதை பார்த்துமே இருவரது காதல் மற்றும் எதிர்காலத்தை பற்றி சொல்லிவிட முடியுமாம்.

ஜப்பானில் லேசான நிலநடுக்கம்!

ஜப்பானில் லேசான நிலநடுக்கம்!

ஜப்பானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிபா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள், அலுவலகங்களைவிட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
திமுக அரசியல் பேசும் பிளக்ஸ் பேனர்!

திமுக அரசியல் பேசும் பிளக்ஸ் பேனர்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல்வர் முறையாக இக்கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் மூலம் முக்கியமான விஷயங்களை ரகசியமாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எப்போதும் தனியாக இருக்கும் ஸ்டாலின் படம் தற்போது முதல்முறையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி: ரூ.70ஐத் தாண்டியது!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி: ரூ.70ஐத் தாண்டியது!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மிகவும் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.70.07 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இந்தியப் பொருளாதார வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more