Short News

உச்சத்தை தொடுவாரா தோனி: இன்று தெரியும்!

உச்சத்தை தொடுவாரா தோனி: இன்று தெரியும்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தோனியும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 316 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி 9 ஆயிரத்தி 954 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் 10 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 46 ரன்கள் தேவையாக உள்ள சூழ்நிலையில் இன்றைய தென் -ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க வந்துள்ள ஆளுநருக்கு திமுக,விசிகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதற்கு "ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்" என்று விமர்சனம் செய்து ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்
ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

இந்தியாவில் பஸ் போக்குவரத்து அதிகாரித்தாலும் இன்றும் பலரது விருப்பமாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் நாடுகின்றனர், இதற்கு காரணம் கழிப்பறை வசதி என்று பயணிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயின் சில விஷயம் தெரியவருவதில்லை. இதில் ரயில் பின்புறம் இருக்கும் 'X' என்ற குறி எந்த பழுதும், பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிக்கிறது.
வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழல் என்பதை ஒப்பிடும்போது சீனாவை விட இந்தியாவே சிறப்பாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு ஜான் தெரிவித்துள்ளார். மேலும் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சீர்த்திருத்தம் என்பது சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கும் என தெரிவித்தார்.