Short News

இன்று 5வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்!

இன்று 5வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்!

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால், தென் ஆஃப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றுச் சாதனையை இந்தியா படைக்கும்.
வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

மெக்சிகோ கொடி நாள்1948 - தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது 1582 - கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது  2009 - வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
ரசிகர்களை ஷாக்காகிய கங்கானா!

ரசிகர்களை ஷாக்காகிய கங்கானா!

தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாத். இவர் பாலிவுட் பக்கத்தில் பிரபல நாயகியாகவும் கலக்கி வருகிறார். இணையத்தில் இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அந்த போட்டோவில் கங்கானா திக உடல் எடை போட்டு ஆளே மாறியுள்ளார். இவர் தற்போது ஓரு ராணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
12 நிமிடத்தில் துபாயில் - அபுதாபிக்கு செல்லும் ஹைபர்லூப் பாட்!

12 நிமிடத்தில் துபாயில் - அபுதாபிக்கு செல்லும் ஹைபர்லூப் பாட்!

துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் பாட் போக்குவரத்து பொதுமக்கள் பயன்பட்டுக்கு வந்துள்ளது. இது மணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைபர்லூப் பாட் போக்குவரத்து மூலம் 12 நிமிடங்களில் துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றடைய முடியும் என்பது இதான் சிறப்பு