Short News

இன்று 5வது ஒருநாள்: வரலாறு படைக்குமா இந்தியா?

இன்று 5வது ஒருநாள்: வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையிலான  5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  இன்று  போர்ட் எலிசபெத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால்,  தென் ஆஃப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக்  கைப்பற்றிய வரலாற்றுச் சாதனையை  இந்தியா படைக்கும்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 61 வயதான இந்து மல்ஹோத்ரா, இந்தியா விடுதலையான பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 7ஆவது பெண் நீதிபதி ஆவார்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதா?... இத சாப்பிடீங்களா?...

எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதா?... இத சாப்பிடீங்களா?...

வீட்டு வைத்தியம் தான் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உணவே மருந்தாகும் மருத்துவ முறையாகும். சிறப்பு என்னவென்றால், இதில் குறிப்பிட்டுள்ள பல வழிமுறைகளை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம். அதற்காக வழக்கமான உங்கள் நடைமுறைகளை பெரிதாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எனவே , எடையைக் கூட்ட வீட்டு வைத்தியங்களே சிறந்த வழியாகும். வெண்ணெய், மாம்பழம், பால்இ அத்திப்பழம், உலர் திராட்சை, கடலை எண்ணெய்,

நளினியின் விடுதலை நிராகரிப்பு!

நளினியின் விடுதலை நிராகரிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.