Short News

சென்னைக்கு எதிரான போட்டி: பஞ்சாப் முதலில் பேட்டிங்!

சென்னைக்கு எதிரான போட்டி: பஞ்சாப் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.
நடிகையின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

நடிகையின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், சன்னி லியோன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த போட்டோ ஒன்றை திஷா பதானி வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் திஷா பதானியின் இடுப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர் 
மதுரை சிறையில் நிர்மலாதேவியிடம் மீண்டும் விசாரணை!

மதுரை சிறையில் நிர்மலாதேவியிடம் மீண்டும் விசாரணை!

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை அதிகாரி சந்தானம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளார். இன்று காலை 3 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், உணவு இடைவேளைக்கு பின் சற்றுமுன் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணைக்கு நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு தருவதாக சந்தானம் தெரிவித்திருந்தார்.
கவாசாகி ஜெ மூன்று சக்கர வாகனம்!

கவாசாகி ஜெ மூன்று சக்கர வாகனம்!

மார்டன் பைக் உருவாக்கத்தில் புலிப்பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது கவாசாகி நிறுவனத்தின் ஜெ வகை மோட்டர் சைக்கிள். டோக்கியோ நகரில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் இதனை கவாசாகி நிறுவனம் அறிமுகம் செய்தது. நிக்கல் உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் ஸ்போர்ட்ஸ் மோடும் இருக்கிறது. இந்த பைக் குறித்த பிரத்யேக தகவல்களை அந்நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது.