Short News

நிறைவடைந்த காமன்வெல்த்!

நிறைவடைந்த காமன்வெல்த்!

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியா 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா எப்போதும் முதலிடத்தில் போல 198 பதக்கங்கள் வென்றுள்ளது. இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்திய வீரர்களின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

மே மாதம் முதல் புதிய டீசல் காருக்கான வரி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் காரின் விலை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள். இல்லையென்றால் அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
அஜால் குஜால் நடிகையாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

அஜால் குஜால் நடிகையாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

நெட்டில் அது மாதிரி விஷயங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சவிதா பாபி என்ற காமிக்ஸ் நன்று தெரியும். இந்த சவிதா பாபியைத் தழுவி சவிதா பார்பி என்கிற அஜால் குஜால் படம் 3டியில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், சவிதா பார்பியாக கெஹானா நடிக்க இருக்கிறார். இவர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும், இறவாக்காலம் படத்திலும் நடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடனும், அழகாகவும் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், கரும்புள்ளிகள் போன்றவை அழகைக் கெடுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால் இப்படி முதுமைத் தோற்றத்தை இளமைலேயே பெறுவதை நம்மால் தள்ளிப் போட முடியும். அதுவும் ஒருசில ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க் மூலம் தாமதப்படுத்தலாம்.