Short News

7ஆவது டெஸ்ட் சதம் விளாசினார் தவான்!

7ஆவது டெஸ்ட் சதம் விளாசினார் தவான்!

பெங்களூருவில் நடக்கும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டில், தன் 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவான். இன்று தொடங்கிய இப்போட்டியில், அவர் இதுவரை 90 பந்துகளில் 104 ரன்களைக் குவித்துள்ளார். எதிர் முனையில், அவருக்கு உறுதுணையாக 41 ரன்களுடன் ஆடி வருகிறார் முரளி விஜய்.
குறைந்தது மழை: கபினியிலிருந்து நீர் திறப்பும் குறைப்பு!

குறைந்தது மழை: கபினியிலிருந்து நீர் திறப்பும் குறைப்பு!

கர்நாடகாவில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கபினி அணை கிடுகிடுவென உயர்ந்ததால், காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், மழை குறைந்ததைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து நீர் திறப்பும் குறைந்து விட்டது. இதையடுத்து, ஒகேனக்கல்லுக்கும் மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. மீண்டும் மழை பெய்தால்தான் நீர் திறப்பும் அதிகரிக்கும்.
அரசியலில் குதிக்கும் நடிகர் பார்த்திபன்!

அரசியலில் குதிக்கும் நடிகர் பார்த்திபன்!

நல்ல மனிதர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும், நானும் வருவேன் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், தன்னை நடிகன் என்பதை கடந்து மனிதனாகவே பார்ப்பதாக கூறினார்.
சுனாமி எச்சரிக்கையால் கலங்கி நிற்கும் ஜப்பானின் ஒசாகா!

சுனாமி எச்சரிக்கையால் கலங்கி நிற்கும் ஜப்பானின் ஒசாகா!

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் உடனடியாக விடுக்கப்பட்டது. ஒருபுறம் மீட்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், சுனாமி எச்சரிக்கை காரணமாக ஒசாகா நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more