Short News

ஆஸி. காமன்வெல்த்தில் இருந்து விலகிய நட்சத்திர வீராங்கன!

ஆஸி. காமன்வெல்த்தில் இருந்து விலகிய நட்சத்திர வீராங்கன!

ஆஸ்திரேலியா கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் போட்டியில் இருந்து இந்தியா நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மூட்டு வலி காரணமாக அவர் விளையாடவில்லை எனவும் ஆகஸ்ட் 18ல் நடக்கும் , ஆசிய விளையாட்டு தொடரில் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என பயிற்சியாளர் விஸ்வேஸ்வர் கூறியுள்ளார்
வங்கி அதிகாரிகளுக்கு கட்டாய டிரான்ஸ்பர்: அதிரடி உத்தரவு!

வங்கி அதிகாரிகளுக்கு கட்டாய டிரான்ஸ்பர்: அதிரடி உத்தரவு!

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கி அதிகாரிகளை கட்டாய பணியிடை செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வங்கிகளில் அதிகரிக்கும் வாராகடன்களில் எண்ணிக்கை, சட்டவிரோதமாக அதிக கடன்களை வழங்குவது உள்ளிட்ட புகார்கள் வங்கி அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக தனது வங்கி அதிகாரிகள் மீதான தனது கண்காணிப்பை ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐபோனை முடக்கும் தெலுங்கு 'ஞா'!

ஐபோனை முடக்கும் தெலுங்கு 'ஞா'!

ஐபோனுக்குப் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது தெலுங்கு மொழியிலுள்ள 'ஞா' என்ற எழுத்து. வாட்ஸ்ஆப், இ-மெயில் என எதன் மூலமும் இந்த எழுத்து ஐபோனுக்குச் சென்றாலும், அந்த ஐபோன் செயலிழந்து விடும். இந்தப் பெரும் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறதாம் ஐபோனின் ஆப்பிள் நிறுவனம்.
என்னை போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து... கமல் ஹேப்பி

என்னை போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து... கமல் ஹேப்பி

அரசியலில் சீனியர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று கமல் தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கமல் சந்தித்தார். ரஜினியை சந்தித்தபோது கமல் கூறுகையில் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.