Short News

காயம் காரணமாக களமிறங்காத அதிரடி வீரர்கள்!

காயம் காரணமாக களமிறங்காத அதிரடி வீரர்கள்!

இந்திய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து டூ  பிளசிஸ்,  டி காக் உள்ளிட்ட  அதிரடி  ஆட்டக்காரர்கள்  காயம் காரணமாக  விலகியுள்ளனர். பிளசிஸ்  விலகல் காரணமாக  ஜே.பி. டுமினி தலைமையில் தென் ஆப்பிரிக்கா  களமிறங்க  உள்ளது  குறிப்பிடத்தக்கது.    
இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை குறைந்துள்ளது ரூபாய் மதிப்பு குறைவுக்கு முக்கியக் காரணமாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.52 ஆகும். கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.21 ஆக இருந்தது.
மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக போர்கொடி தூக்கிய 12எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது அதனை திரும்ப பெற்றுள்ளது. இதன் மூலம் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 39 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எமர்ஜென்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்யும் வலைதளத்தில் சில தொழிற்நுட்ப சிக்கல்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது. சிறு வணிகர்கள் தங்களது தொழில் தொடர்பான ஆவணங்களை (பைல்களை) பதிவேற்றம் செய்யும்போது பார்மேட் தவறு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அதில் நீடிப்பதாக கூறப்படுகிறது.இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.