Short News

தென் ஆப்பிரிக்காவின் கோட்டை: தகர்க்குமா இந்தியா!

தென் ஆப்பிரிக்காவின் கோட்டை: தகர்க்குமா இந்தியா!

ஒரு நாளை போட்டிகள் கொண்ட தொடரை வென்றுவிட்டாலும் நாளை போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றவிருக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இதுவரை ஐந்து போட்டிகளை போர்ட் எலிசபெத் மைதானத்தில் விளையாடி உள்ள ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை.
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கமலின் 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
இனிமேல் தான் விஸ்வரூபம் ஆரம்பம்- கமல்!

இனிமேல் தான் விஸ்வரூபம் ஆரம்பம்- கமல்!

மதுரையில் நடைபெற்ற தனது 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "அநீதிகளை கண்டு காத்திருக்க முடியாமல் களம் இறங்கியுள்ளோம், நான் உங்கள் தலைவன் அல்ல, தொண்டன், மக்கள் கஷ்டத்தை பார்த்து இனிமேல் தான் எடுக்கப்போகிறேன் விஸ்வரூபம்", என்று அதிரடியாக பேசினார்.