Short News

தெ.ஆ. மண்ணில் முதல் முறை ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதனை!

தெ.ஆ. மண்ணில் முதல் முறை ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதனை!

தென் ஆஃப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி. நேற்று போர்ட் எலிசபெத்தில் நடந்த 5ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆஃப்ரிக்க அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இச்சாதனையை இந்தியா படைத்துள்ளது. 275 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென் ஆஃப்ரிக்கா, 42.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சிக்காக விளம்பரம் செய்யும் ஆரியா!

தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சிக்காக விளம்பரம் செய்யும் ஆரியா!

வட இந்தியாவில் பிரபலமான கலர்ஸ் தொலைக்காட்சி தற்போது போட்டி மிகுந்த தமிழ் தொலைக்காட்சி உலகில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த தொலைக்காட்சியை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஆரியாவை வைத்து முதற்கட்டமாக ரியால்டி ஷோ களத்தில் குதித்துள்ளது கலர்ஸ் தொலைக்காட்சி.  ஆரியாவின் இந்த நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகிறது.
ஜியோவுக்கு எதிராக டொகோமோவும் களமிறங்கியது!

ஜியோவுக்கு எதிராக டொகோமோவும் களமிறங்கியது!

ஜியோவுக்கு போட்டியாக பல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. இந்த போட்டியில் டொகோமோ பங்கேற்காது என சொல்லப்பட்டு வந்தது . ஆனால், அனைவரையும் மூக்கு மேல் கைவைக்கும் படி, ஆச்சரியம் படும் வகையில் புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. தற்போது ரூ.82ல் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. இதில், அன்லிமிட்டெட் 3ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் 28 நாட்களுக்கு வழங்கியுள்ளது.
அரசியல் கூட்டத்தை விட படபிடிப்பே முக்கியம்!

அரசியல் கூட்டத்தை விட படபிடிப்பே முக்கியம்!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு தமிழ் திரையுலக நடிகர், நடிகைகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து நடிகையும், கமலின் மகளுமான ஸ்ருதிஹாசன் அப்பாவின் அரசியல் பயணத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என கூறியுள்ளார். மேலும் படபிடிப்பு உள்ளதால் மதுரை மற்றும் ராமேஸ்வரம் கூட்டத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.