Short News

பாகிஸ்தானை கதறவிட்ட அயர்லாந்த்!

பாகிஸ்தானை கதறவிட்ட அயர்லாந்த்!

அறிமுக டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றது. இதில் அயர்லாந்த் அணி 3ம் நாளில் 2வது இன்னிங்ஸில் விக்கட் இழப்பின்றி ஜாய்ஸ்-போர்ட்டர்ஃபீல்ட் கூட்டணி 50 ரன்கள் மட்டும் எடுத்து அன்றைய தினம் ஆட்டத்தை ஜவ்வாக இழுத்து பாகிஸ்தான் வீரர்களின் வியர்வையை சிந்த வைத்தனர். இதன் மூலம் தங்கள் அணி டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் என நிரூபித்துவிட்டது.
7 ஆண்டுகளாக தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி மீட்பு!

7 ஆண்டுகளாக தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி மீட்பு!

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அல் ஹஜர் அல் அஸ்வட் மாவட்டத்தை ரஷ்யா ஆதரவு அரசு படைகளை கைபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: பாதுகாப்பு வளையத்தில் சென்னை!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: பாதுகாப்பு வளையத்தில் சென்னை!

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சென்னை முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 
கருத்து கந்தசாமி ஆர்ஜே. பாலாஜி மீது கொலவெறியில் தூத்துக்குடி மக்கள்!

கருத்து கந்தசாமி ஆர்ஜே. பாலாஜி மீது கொலவெறியில் தூத்துக்குடி மக்கள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகருத்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி, கலகக்காரர்களால் அமைதியான போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. இது வருத்தமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலகக்காரர்கள் என்று கூறியதால் தூத்துக்குடி மக்கள் அவர் மீது கொலவெறியில் இருக்கின்றனர்.