Short News

தென் ஆப்பிரிக்காவின் புதுமுக வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவின் புதுமுக வீரர்கள்!

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் க்ளாசீன், ஜூனியர் டாலா, ஜோன்கர் ஆகிய வீரர்கள் புது முகங்களாக களமிறங்க உள்ளனர். இந்த மூன்று வீரர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
அழகு முகம் ஸ்ரீதேவி மறைந்துவிட்டது- வைரமுத்து இரங்கல்!

அழகு முகம் ஸ்ரீதேவி மறைந்துவிட்டது- வைரமுத்து இரங்கல்!

கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் ஸ்ரீதேவியின் முகம், அந்த முகம் மறைந்துவிட்டது என்று கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,தெற்கில் உதித்து வடக்கை வெற்றிக்கொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே இன்று விழுந்துவிட்டது. நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
எலிபண்டா தீவுக்கு மின்சார இணைப்பு- மோடி பெருமிதம்!

எலிபண்டா தீவுக்கு மின்சார இணைப்பு- மோடி பெருமிதம்!

அகில இந்திய வானொலி மூலமாக 41வது முறையாக 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் பிரமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இதில், மும்பை துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபண்டா தீவுகளில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் இறுதியாக மின்சார இணைப்புகள் வழங்கியுள்ளது. இதை சாத்தியமாக்கிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
அமெரிக்கா சோதனை: வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா சோதனை: வடகொரியா எச்சரிக்கை!

வடகொரியா மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ள சூழ்நிலையில் சரக்கு கப்பல்களை சோதனையிட அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சரக்குக் கப்பல்களை இடைமறித்து சோதனையிடும் செயலை போராகவே கருதுவோம் என வடகொரியா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.