Short News

தவானை நக்கல் செய்த தெ.ஆ வீரர் ரபாடாவுக்கு அபராதம்!

தவானை நக்கல் செய்த தெ.ஆ வீரர் ரபாடாவுக்கு அபராதம்!

தென் ஆப்பிரிக்கா எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதில்,ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறும்போது, பாய்,பாய்('bye bye)என்று கூறிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, தவானை நக்கல் செய்துள்ளார். இதற்கு ஐசிசி வாரியம் கண்டனம் தெரிவித்து, ரபாடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

என்னை விட பெரிய செல்வந்தர்கள் இருந்தாலும் நான் தான் அதிகமான வரியை செலுத்துவதாக பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பில் கேட்சை அமேசான் நிறுவத்தின் சிஇஓவின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

ஈராக்கில் அரசுப் படையினரிடம் சரண் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் சரணடைந்த ஐ.எஸ் தீவிரவாத பெண்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொரு துருக்கி நாட்டு பெண்ணுக்கு தூக்கு தண்டனையும் விதித்து இன்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அப்துல் சத்தார்  தெரிவித்தார்.
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தை என்றும் பாராமல் ஹாசினியை கொடூரமாக கொன்ற குற்றத்துக்காக இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கின்றனர். தஷ்வந்தை நீதிமன்றத வளாகத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.