Short News

சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்!

சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்!

தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான நேற்றைய 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 சிக்ஸர்களுடன் சதமடித்தார் இந்தியாவின் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் 265 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 264 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இப்பட்டியலில் 331 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் மஹேந்திர சிங் தோனி.
கமலுக்காகத் திரளும் லட்சக்கணக்கான மக்கள்!

கமலுக்காகத் திரளும் லட்சக்கணக்கான மக்கள்!

இன்று தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனைக் காண லட்சக்கணக்கானோர் ராமநாதபுரத்தில் திரண்டனர். அவர்களிடையே பேசிய கமல், "உங்களுடைய அன்பு என்னும் வெள்ளத்தில் நீந்தத்தான் வந்தேன். மக்கள் வெள்ளம் தொடர வேண்டும்" என்றார். அடுத்ததாக தான் பிறந்த பரமக்குடியிலும் பேச உள்ளார் கமல்.
திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க வந்துள்ள ஆளுநருக்கு திமுக,விசிகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதற்கு "ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்" என்று விமர்சனம் செய்து ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்
ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

இந்தியாவில் பஸ் போக்குவரத்து அதிகாரித்தாலும் இன்றும் பலரது விருப்பமாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் நாடுகின்றனர், இதற்கு காரணம் கழிப்பறை வசதி என்று பயணிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயின் சில விஷயம் தெரியவருவதில்லை. இதில் ரயில் பின்புறம் இருக்கும் 'X' என்ற குறி எந்த பழுதும், பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிக்கிறது.