Short News

66 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3வது இடம்!

66 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3வது இடம்!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இதில், இன்றைய ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாதிவிக், சந்திரசேகர் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன், தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-25; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-26; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-27; திருப்பூர்-26; வேலூர்-27; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 13; பிறை: வளர்பிறை; திதி: ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி; நட்சத்திரம்: பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம்; யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை, பிறகு மரணயோகம்; சூலம்: தெற்கு; ராகுகாலம்: பகல் 01:30 முதல் 03:00 வரை; எமகண்டம்: காலை 06:00 முதல் 07:30 வரை; நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலும் வறண்ட வெப்பமே நிலவியது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் நன்றாகவே வெயில் வெளுக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:51, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 3:19, மறைவு: அதிகாலை 3:53.