Short News

ஆர்.ஆர். அணியில் மீண்டும் ஷேன் வார்ன்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆர்.ஆர். அணியில் மீண்டும் ஷேன் வார்ன்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேட்னாக இருந்து பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தவர் ஷேவ் வார்ன் என்பதை மறுக்க முடியாது. தற்போது அணியின் ஆலோசகராக ஷேன் வார்ன் ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் புதிய வரி சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனத்தை தெரிவித்த நிலையில், தற்போது பிரபல தொழிலதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமேசான் அதிபர் ஜெஃப் பெஸாஸுக்கு அடுத்தப்படியாக பில்கேட்ஸ் இந்த வரி சீர்த்திருத்தை விமர்சித்துள்ளது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட்டின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜேம்ஸ் பாண்ட் சிரிஸின் புதிய பாகத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கிறிஸ்டோபர் நோலன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

என்னை விட பெரிய செல்வந்தர்கள் இருந்தாலும் நான் தான் அதிகமான வரியை செலுத்துவதாக பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பில் கேட்சை அமேசான் நிறுவத்தின் சிஇஓவின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.