Short News

198 ரன்கள் இலக்கு: வெல்லுமா சென்னை அணி!

198 ரன்கள் இலக்கு: வெல்லுமா சென்னை அணி!

சென்னை அணிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேய்ல் மற்றும் ராகுல் நல்ல தொடக்கத்தை தந்தனர். இருப்பினும் 220 ரன்கள் தாண்டி இருக்க வேண்டிய ஸ்கோர் யுவராஜ், ஃபின்ச் ஆகியோரது சொதப்பலான ஆட்டத்தால் 200 ரன்கள் கூட எடுக்க முடியாமல் பஞ்சாப் அணி தனது 20 ஓவரை நிறைவு செய்தது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-25; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-26; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-27; திருப்பூர்-26; வேலூர்-27; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 13; பிறை: வளர்பிறை; திதி: ஏகாதசி திதி காலை 10.04 வரை பிறகு துவாதசி; நட்சத்திரம்: பூர நட்சத்திரம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திரம்; யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3 வரை, பிறகு மரணயோகம்; சூலம்: தெற்கு; ராகுகாலம்: பகல் 01:30 முதல் 03:00 வரை; எமகண்டம்: காலை 06:00 முதல் 07:30 வரை; நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலும் வறண்ட வெப்பமே நிலவியது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் நன்றாகவே வெயில் வெளுக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:51, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 3:19, மறைவு: அதிகாலை 3:53.