Short News

"இனி அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியுள்ளோம்!"

"இனி அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியுள்ளோம்!"

மும்பையில் நேற்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 50ஆவது போட்டியை மும்பை அணி கைப்பற்றியது. அந்த அணியிடம் மூன்றே ரன்களில் தோற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், "இந்த நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. மனம் வெறுமையாக உள்ளது. நன்றாகத்தான் சேஸ் செய்தோம். ஆனாலும் அது எங்களுக்குச் சாதகமில்லாமல் போய் விட்டது. இனி அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம்" என்றார்.
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

சென்னை நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட எட்டிப்பார்க்காத நிலையில் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது தமிழர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.