Short News

ஹைதராபாத் அணி வெற்றிக்கு 219 ரன்கள் இலக்கு!

ஹைதராபாத் அணி வெற்றிக்கு 219 ரன்கள் இலக்கு!

பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஏபி டி வில்லியர்ஸ் 69 ரன்களும், மோயீன் அலி 65 ரன்களும் விளாசினர். 
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்றும் காலையில் மிதமான வெப்பம் நிலவியது. காலை 7.50 மணிக்கு 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில மேகக் கூட்டங்களுடன் வெயில் நன்றாகவே கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:43, மறைவு: மாலை 06:28; சந்திர உதயம்: காலை 09:21, மறைவு: இரவு 10:30
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-சந்தோஷம்; ரிஷபம்-பாராட்டு; மிதுனம்-பரிசு; கடகம்-இன்பம்; சிம்மம்-துன்பம்; கன்னி-ஆக்கம்; துலாம்-ஆதாயம்; விருச்சிகம்-கீர்த்தி; தனுசு-வெற்றி; மகரம்-உதவி; கும்பம்-பேராசை; மீனம்-வாழ்வு... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்!
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, வைகாசி 6; பிறை: வளர்பிறை; திதி: காலை 7.07 வரை சஷ்டி திதி பிறகு சப்தமி வரை; நட்சத்திரம்: பூச நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 2.55 வரை அதன் பிறகு ஆயில்யம்; யோகம்: சித்தயோகம்; சூலம்: மேற்கு; ராகுகாலம்: மாலை 04:30 முதல் 06:00 வரை; எமகண்டம்: மதியம் 12:00 முதல் 01:30 வரை; நல்ல நேரம்: காலை 6.30-7.30; மாலை 3.30-4.30. இன்று முகூர்த்த நாள்.