Short News

டெல்லி vs கொல்கத்தா!

டெல்லி vs கொல்கத்தா!

இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்ட்ன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெற இருக்கிறது. குறிப்பாக பலம் வாய்ந்த ஸ்பின் பந்துவீச்சை வைத்திருக்கும் கொல்கத்தா அணி, வேகப்பந்து வீச்சில் பலமாக இருக்கும் டெல்லியை எதிர்கொள்கிறது.
ரசிகர்களை ஷாக்காகிய கண்ணழகி!

ரசிகர்களை ஷாக்காகிய கண்ணழகி!

'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் மூலம் இணையத்தில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த பாடலுக்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகிறதாம். இந்நிலையில், அவர் தன்னையுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்து ப்பா... யாரு இது பேய் மாறி... என விஜய் சேதுபதி பணியில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  
ஆச்சர்யப்படவைத்த சர்ச்சை தம்பதிகள்!

ஆச்சர்யப்படவைத்த சர்ச்சை தம்பதிகள்!

52 வயதான நடிகர் மிலின்ட் 27 வயதான அன்கிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பலர் வாழ்த்தினாலும், இந்த வயதில் இப்படி ஒரு திருமணம் தேவையா என சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த இந்த ஜோடி முதன் முதலாக செடி நடும் வேலையை செய்துள்ளனர். இவர்களின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
சூர்யாவுக்கு காதலிக்க கத்துக்கொடுத்தவர் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு காதலிக்க கத்துக்கொடுத்தவர் யார் தெரியுமா?

இன்று நடந்த 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "கார்த்திக் சார் படம் பார்த்துதான் லவ்னா இப்படித்தான் இருக்குமோ, லவ் இப்படித்தான் பண்ணணுமோ அப்படிங்குற ஐடியாவே கிடைச்சது, அவர்தான் எனக்கு காதலிக்கிறது எப்படினு கத்துக்கொடுத்தவர், அவர் செட்ல இருந்தா யாருக்கும் எனர்ஜி டவுனே ஆகாது," என்றார்